Friday, June 19, 2009

சில்லென்ற சோலையிலே
சிந்திக்கும் வேலையிலே
சிங்கார குரல் கேட்டதும்
சிட்டென மனம் விரிந்து
சிந்தனையில் விடுபட்டு
சிந்திக்க வைத்தாரோ ?

கருவண்ண நிறம் கொண்டு
காக்கையின் வழிவந்து - எனை
கரசி லையாக்கி

மயில்

வண்ணக் கோலமிட்டு
வானத்தில் வட்டமிட்டு
கண்களை கவர்திழுத்து
காண்போரை வியக்க வைத்து
சிலிர்க்கும் தோகை விரித்து
சிக்கென்று நடைபோட்டு
சிங்கார தலை கொண்டு
உலவ விட்ட இறைவன்
அனைத்திற்கும் மேலும்
காந்த குரலையும் வைத்து
திருஸ்டி கழித்தானோ?

ஆசை

வைரங்கள் மின்னும் நேரத்தில்
முத்துகள் உதிரும் நேரத்தில்
வெள்ளித்தட்டு மிதக்கும் நேரத்தில்
வழி தெரியா குயில் கூவும் நேரத்தில்
மென்தென்றல் வீசும் நேரத்தில்
அல்லி மலரும் நேரத்தில்
உலகம் உறங்கும் நேரத்தில்
நான் மட்டும் விழித்திருக்க ஆசை !

வானத்து வெண்நிலவு

வானத்து வெண்நிலவு
அதன் வட்டமான கட்டழகு !

வானத்து வெண்நிலவு
அது தவழ்ந்திடும் விதமழகு !

வானத்து வெண்நிலவு
அதன் குளிர் தரும் ஒளியழகு !

வானத்து வெண்நிலவு
அதன் அசைந்தாடும் நடையழகு !

வானத்து வெண்நிலவு
அதன் வியக்க வைக்கும அழகு
அழகோ அழகு !!!!!

காற்றின் வியர்வை

காற்றே ,
உனக்கு வியர்குமா என்றேன் .
ஆம் என்றது !
ஆதாரமாய் மழைத்துளிகளுடன் !!!!

நினைவின் நினைவில்

இருப்பதை மறந்து
இல்லாததை நினைத்து !

மறப்பதை நினைத்து
மறவாமல் இருப்பதை மறந்து !

பேசியதை மறந்து
பேசாததை நினைத்து !

எண்ணியதை மறந்து
எண்ணாததை நினைத்து !

பார்த்ததை மறந்து
பார்க்காததை நினைத்து !

நடந்ததை மறந்து
நடக்காததை நினைத்து !

பிறந்ததை மறந்து
இறப்பதை நினைத்து
நினைவின் நினைவில்
வாழ்வதே வாழ்கை !!!!!!!!!!

அரைமணியில் அடிபட்டு போனதே !

அடித்துப் புரண்டு
அசந்து போயினும்

கடித்து களித்து
கழித்துப் போயினும்

சிரித்துத் திரிந்து
திகட்டிப் போயினும்
திரியாத நட்பு

அரைமணியில்
அடிபட்டு போனதே !

அன்றே மறுப்பின் இந்நிலை இன்றேது !

அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !

நிஜம்போல் பழகி
நிழலாய் போனதேன் !
மணம்மிகு மல்லிகையும்
கற்றாழை பூவானதேன்!

வற்றாத நதிகளும்
வற்றிப்போகும் காலத்தில் ,
வற்றாமல் தடையுண்ட காவிரியாய்
நம் நட்பு மாறியதேனோ ?

இதனால்
கலங்கா என் மனம்
நொருங்கிப் போனதே !
அன்றே மறுப்பின்
இந்நிலை இன்றேது !

ஏன் இந்த குழப்பம் ?

ஏன் இந்த குழப்பம் ?

காரணம் புரியவில்லை ,
விடியும் தெரியவில்லை !
சொல்லவும் முடியவில்லை ,
சொல்லாமல் இருக்கவும் பழகவில்லை !

எதையும் மனதில் வைத்ததில்லை ,
வேண்டாமென்று விட்டதில்லை !
என்ன செய்தேன் என்ற நினைவுமில்லை ,
என்ன செய்வேன் என்ற தெளிவுமில்லை !

காத்திருந்து கிடைத்ததால்
கடைசிவரை வருமென்று
கற்பனையில் மிதந்து
கற்சிலையினின்று வேளிப்பட்டேன் !

கள்ளமில்லா பழக்கத்தால் ,
எனக்கே உரியதென்று
எண்ணி மகிழ்ந்து
எனக்கே சொந்தமேன்றிருந்தேன்
அது
வேரோருடயது என்று அறியாமல் !!

இயேசுவல்ல நான் !!!!!!!!!!

சிந்தனை மறந்து என்னை
நிந்தனை செய்துவிட்டாய் !

சிலபேர் சொல்கேட்டு என்னை
சிலுவையில் அறைந்து விட்டாய் !

கருவறையில் இருந்த என்னை
கல்லறையில் புதைத்துவிட்டாய் !

இனி வருந்திஎன்ன பயன் ,
இயேசுவல்ல நான்
மூன்றாம் நாள் உயிர்த்தெழ !!!!

சந்ததி வளரும் !!!!!!

சந்ததிகள் இல்லையேல்
சந்நிதி செல்லாதீர்

இல்லங்கள் செல்வீர்
அனாதை இல்லங்கள் செல்வீர்
ஒன்றென்ன
பல வம்சம் வரை
உன் சந்ததி வளரும்
மனமிருந்தால் !!!!!!

வாழ்க்கை

முன்னுரை தேவைஇல்லை வாழ்கைக்கு
முடிவுரை என்றுமில்லை வாழ்விற்கு

சாதிக்க துடிக்கும் மனதில்
நம்பிக்கை இழக்கவைப்பர்

எதிர்த்து நில்
வாழ்க்கை உன்கைகளில் .